குழந்தைகளுக்கான பருப்பு சாதம் செய்வது எப்படி?
Share
குழந்தைகளுக்கான பருப்பு சாதம் செய்வது எப்படி?
சுவையான பருப்பு சாதம் செய்வது எப்படி?
குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து பருப்பு சாதம் தரலாம்
பருப்பு சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இதை செய்வதும் மிகவும் எளிது. இதை எப்படி செய்வது?
தேவையானவை:
அரிசி – 2 கப்
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
பூண்டு – 2 பல்
பெருங்காயம் – தேவையெனில்
நெய் – சிறிது
செய்முறை :
அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும்.
பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரை விடவும்.
பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு, இத்துடன் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.
குறிப்பு :
இதில் காய்கறிகள் போட்டும் செய்யலாம்.
குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்
- 1 வயது குழந்தைக்கான உணவு
6 மாத குழந்தைக்கான உணவு
8 மாத குழந்தைக்கான உணவு
கஞ்சி
கிச்சடி
கூழ்
சாதம்
ப்யூரி
Hits: 8143, Rating : ( 5 ) by 1 User(s).